நாமக்கல்லில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று வாகன பேரணியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி இன்று மதியம் 12 மணி அளவில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார்.
இதையடுத்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் பரமத்தியில் உள்ள பி.ஜி.பி.கல்லூரிக்கு ராஜ்நாத் சிங் சென்றார். அவருக்கு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து, பா.ஜ., வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து, ராஜ்நாத் சிங், இன்று நாமக்கல்லில் ரோடு ஷோ நடத்தினார்.
அவரை சாலையின் இருபுறமும் கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்றனர்.
இன்று மாலை நாமக்கல், திருவாரூர், ராஜபாளையத்தில் தேர்தல் பிரச்சார நிகழ்வுகளில் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.