பிரதமரின் வாகன பேரணிக்கு ஏகப்பட்ட நிபந்தனைகள்!
Mar 15, 2026, 12:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமரின் வாகன பேரணிக்கு ஏகப்பட்ட நிபந்தனைகள்!

Murugesan M by Murugesan M
Apr 8, 2024, 03:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி நாளை பாண்டிபஜார் முதல் தேனாம்பேட்டை வரை வாகனப் பேரணி மேற்கொள்கிறார். இதற்காக 20 நிபந்தனைகளை விதித்து காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலையொட்டி இந்தாண்டில் 6-வது முறையாக பிரதமர் மோடி நாளை (ஏப்ரல் 9) தமிழகம் வருகிறார்.

2 நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.  பிரதமரின் பயணத் திட்டத்தின் படி கேரள மாநிலம் பாலக்காட்டில் நாளை தேர்தல் பரப்புரையை முடித்துக்கொண்டு மாலையில் சென்னை வருகிறார்.

சென்னை தியாகராயர் நகரில் பாண்டிபஜார் முதல் தேனாம்பேட்டை வரை வாகனப் பேரணி (ரோடு ஷோ) மேற்கொள்கிறார்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், வட சென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி. செல்வத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார்.

அதனைத் தொடர்ந்து அன்று இரவு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

இந்தநிலையில் நாளை சென்னையில் நடைபெற உள்ள பிரதமர் மோடியின் ரோடு ஷோவுக்கு 20  நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மோடி வருகையால் தி.நகர் பகுதியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ட்ரோன்கள் பறக்க சென்னை காவல்துறை தடை விதித்துள்ளது.

தொடர்ந்து மறுநாள் காலை வேலூரிலும் மற்றும் பிற்பகல் மேட்டுப்பாளையத்தில்  நீலகிரியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகனை ஆதரித்தும் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.

பிரதமரின் ரோடு ஷோவுக்கான நிபந்தனைகள் 

* பிரதமரின் ரோடு ஷோவின்போது தொண்டர்கள் பட்டாசு வெடிக்கக் கூடாது
* வெறுப்புணர்வை தூண்டும் வகையில் முழக்கங்களை எழுப்பக் கூடாது
* பிரதமரின் ரோடு ஷோவின்போது உரையாற்றவும் அனுமதியில்லை
* மத நம்பிக்கைகளை காயப்படுத்தும் வகையிலும் வெறுப்புணர்வு தூண்டும் வகையிலும் முழக்கங்கள் எழுப்பக் கூடாது
* குண்டு துளைக்காத வாகனங்களை மட்டுமே பிரதமர் ரோடு ஷோவில் பயன்படுத்த வேண்டும்
* பேனர், கட் அவுட்கள் உள்ளிட்டவற்றை வைக்கக் கூடாது
* அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டுமே ரோடு ஷோ நடத்த வேண்டும்; வேறு எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது
* தோல் பை, தண்ணீர் பாட்டில் போன்ற எளிதில் தூக்கி எறியக்கூடிய வகையிலான பொருட்கள் எடுத்து வரக்கூடாது
* மரத்தால் ஆன கைப்படியிடன் கூடிய பதாகைகள் எடுத்து வரக்கூடாது
* அலங்கார வளைவுகள் அமைக்க கூடாது.
உள்ளிட்ட 20 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

நிபந்தனைகள் மீறப்பட்டால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags: PM Modipm modi road show
ShareTweetSendShare
Previous Post

வட தமிழக உள் மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

Next Post

2024 ஐபிஎல் : புள்ளி பட்டியல்!

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies