வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட பிஎப்ஐ தீவிரவாத அமைப்பின் ஆதரவைப் பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வரலாற்று ரீதியாக காங்கிரசுடன் இணைந்த தொகுதியான அமேதியில் வசிப்பவர்களை இழிவுபடுத்தி பேசினார்.
அமேதி தொகுதியில் வசிக்கும் மக்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவளிப்பார்கள். காந்தி குடும்பத்தினர் அமேதி தொகுதியில் போட்டியிடுவார்கள் என்பது எங்களுக்கு தெரியும்.
அமேதி தொகுதியில் உள்ள 19 லட்சம் பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி ரேஷன் பொருட்கள் வழங்கி வருகிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் 4 லட்சத்து 20 ஆயிரம் விவசாயக் குடும்பங்கள் ரூ.6 ஆயிரம் பெறுகின்றன.
வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கு, பிஎப்ஐ தீவிரவாத அமைப்பின் ஆதரவைப் பெற்றதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது என்று கூறினார்.