ஒரு சதி வலையில் நயினார் நாகேந்திரன் பெயர் : அண்ணாமலை விளக்கம்!
Aug 16, 2025, 11:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரு சதி வலையில் நயினார் நாகேந்திரன் பெயர் : அண்ணாமலை விளக்கம்!

Web Desk by Web Desk
Apr 8, 2024, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 கமல்ஹாசன் உண்மையாகவே இப்படி பேசுகிறாரா, அல்லது தன்னுடைய கட்சியை திமுகவிடம் ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக விற்பதற்காக இப்படி பேசுகிறாரா என்பதை அவர்தான் தெளிபடுத்த வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை,

நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பணம் ரூ.4 கோடி பிடிக்கப்பட்டுள்ளதாக எழுப்பட்ட கேள்விக்கு, பதிலளித்த அவர், “இது தொடர்பாக நெல்லை பாஜக வேட்பாளரும், எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் பதிலளித்திருக்கிறார். ஒரு சதி வலையில் நயினார் நாகேந்திரனின் பெயர் சொல்லப்பட்டிருக்கிறது. ‘எனக்கும், அந்தப் பணத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்று நயினார் நாகேந்திரன் சொல்லிய பிறகு, அதற்குமேல் அது குறித்து பேசுவதற்கு ஒன்றும் இல்லை.

பிடிப்பட்ட பணம் குறித்து பறக்கும்படை, தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கட்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் ஒரு பிரச்சினையும் இல்லை. நயினார் நாகேந்திரன் தனிப்பட்ட முறையில் ‘சம்பந்தம் இல்லை’ என்று கூறிய பிறகு, எதிர்க்கட்சியினர் இதை வைத்து அரசியல் செய்து வருகின்றனர்” என்றார்.

“அதாவது, திருடன் ஒருவன் ஒரு வீட்டில் திருடும்போது, போலீஸார் அந்த வீட்டை நோக்கி செல்வார்கள். திருடன் உடனே திருடிய வீட்டிலிருந்து வெளியே வந்து திருடன் திருடன் என்று சப்தமிடுவான். காவல்துறை வீட்டுக்குள் சென்று திருடனைத் தேடும்போது, திருடன் தப்பித்து ஓடியிருப்பான். அதுதான் திமுக.

தேர்தல் வரும்போது, திமுக செய்யக்கூடிய அனைத்து தவறுகளும்கூட, மக்கள், காவல் துறை, தேர்தல் ஆணையம் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திருடன் திருடன் என்று ஓடிக் கொண்டிருக்கிறார். ஆனால், உண்மையான திருடன் திமுக என்பது தெரியும்.

கோவையில், 85 வயதுக்கு மேற்பட்டோர் தங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு திமுக தங்கத் தோடு, ரூ.2,000 பணமும் வழங்குகின்றனர். எனவே, பணம் குறித்து பேசுவதற்கு ஒரு தார்மிக உரிமை இல்லாத கட்சி திமுகதான். ஆர்.எஸ்.பாரதியின் புகார் என்பது வீட்டில் இருந்து வெளியே வந்த திருடன் ஒருவன் காவல் துறையை குழப்புவதற்காக திருடன் திருடன் என்று சப்தமிடுவதைப் போல உள்ளது” என்றார்.

“கோவையின் புறநகர் மற்றும் மாநகரப் பகுதிகளில், பொதுமக்கள் பயன்படுத்தும்படியான விளையாட்டு மைதானங்களை உருவாக்கித் தருகிறோம் என்பது எங்களுடைய வாக்குறுதி. இதற்கு மக்கள் ஆதரவு தெரவிக்க ஆரம்பித்த பிறகு, முதல்வர் ஸ்டாலின் களத்துக்கு வந்திருக்கிறார். அவர் கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

ஆச்சரியம் என்னவென்றால், ஒரு மக்களவைத் தேர்தல் நடக்கும்போது, ஒரு மாநிலத்தின் முதல்வர் கோவைக்கு வந்து சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று கூறுகிறார். சர்வதேச கிரிக்கெட் மைதானம் தேவைதான். தமிழகத்தில் இன்னும் 4 சர்வதேச மைதானங்கள் தேவைதான். அந்தளவுக்கு பலரும் விளையாட்டில் ஆர்வம் காட்டுகின்றனர்.

முதல்வர் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு பதிலாக, கோவையின் சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது, அதற்கு பணம் கொடுக்கலாமே? 511 தேர்தல் வாக்குறுதிகளில் 20-ஐ கூட நிறைவேற்றவில்லை. கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்தால், மக்கள் வாக்களித்துவிடுவார்கள் என்று முதல்வர் இந்த வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறார்” என்றார்.

“மனநல மருத்துவமனைக்குச் சென்று மூளையை பரிசோதிக்க வேண்டும். அது கமல்ஹாசனாக இருந்தாலும் யாராக இருந்தாலும் சரி, மனநல மருத்துவனைக்குச் சென்று, உண்மையாக அவர்கள் நன்றாக உள்ளனரா? இடப்பக்கம், வலப்பக்கம் என இரண்டு பக்க மூளைகளுமே செயல்படுகிறதா? சுயநினைவுடன்தான் இருக்கின்றனரா? சரியாக உணவு உண்கின்றனரா? என்பதை பார்க்க வேண்டும்.

மேலும், கமல்ஹாசனை ஒரு நல்ல உளவியல் மருத்துவரிடம் அழைத்துச் சென்று மருத்துவ ஆலோசனை வழங்க வேண்டும். கமல்ஹாசன் உண்மையாகவே இப்படி பேசுகிறாரா, அல்லது தன்னுடைய கட்சியை திமுகவிடம் ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக விற்பதற்காக இப்படி பேசுகிறாரா என்பதை அவர்தான் தெளிபடுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

Tags: bjp k annamalaiNayanar Nagendran Name : Annamalai Description!
ShareTweetSendShare
Previous Post

சொந்த மண்ணில் வெற்றி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

Next Post

விமான நிலையத்திற்கு அணுகுண்டு மிரட்டல்: 2 பயணிகளை அதிரடியாக கைது செய்த போலீசார்!

Related News

ரஷ்ய அதிபர் புதின் தன்னை சந்திக்க சம்மதம் தெரிவித்தது ஏன்? – ட்ரம்ப் விளக்கம்!

இன்றைய தங்கம் விலை!

மலையாள திரைப்பட சங்க தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளுக்கு முதன்முறையாக பெண்கள் தேர்வு!

வாஜ்பாய் நினைவு தினம் – நினைவுடத்தில் குடியரசு தலைவர் பிரதமர் மரியாதை!

ஆந்திராவில் அரசுப்பேருந்து ஓட்டிய எம்எல்ஏ!

நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர் வாஜ்பாய் – எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவினர் மீதான புகாரை மறைக்கவே ஆளுநர் பங்கேற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில் நாடகம் – அண்ணாமலை குற்றசாட்டு!

தைலாபுரம் சென்ற அன்புமணி – தாயார் பிறந்த நாள் விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்பு!

ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் : அட்டாரி – வாகா எல்லையில் தேசிய கொடியிறக்கும் நிகழ்ச்சி!

சுதந்திர தின விழா – ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து!

சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் தேநீர் விருந்து – பிரதமர், மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு!

தமிழகம் தேசியத்தின் பக்கம் என்பதை நிலைநிறுத்தியவர் இல.கணேசன் – ஹெச்.ராஜா இரங்கல்!

இல. கணேசனின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது – இபிஎஸ் இரங்கல்!

இல.கணேசன் உடலுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி!

இல.கணேசன் மறைவு – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies