தேசம், தெய்வீகம், தமிழ் ஆகியவற்றை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படும் தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் நியூஸ் ஸ்டூடியோவை மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பொற்கரங்களால் திறந்து வைத்தார்.
முழுக்கமுழுக்க பொது மக்கள் நலனுக்காகவும், வரும்கால இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டவும், தேசிய சிந்தனையை வளர்க்கவும் தொடங்கப்பட்டது தமிழ் ஜனம் தொலைக்காட்சி.
இந்த நிலையில், தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் செய்தி ஸ்டூடியோவை மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.
முன்னதாக, தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.