டெல்லி அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹாரி புரூக் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து அவருக்கு பதிலாக மாற்று வீரரை டெல்லி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இந்நிலையில் இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னர் டெல்லி அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹாரி புரூக் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து வெளியேறினார். அவருக்கு மாற்று வீரரை அறிவிக்காமல் டெல்லி அணி ஆடி வந்தது.
🚨 Announcement 🚨
The 🇿🇦 speedster, Lizaad Williams is all set to ROAR for us this season 🙌
He comes into our squad as a replacement for 🏴's Harry Brook ↩️
#YehHaiNayiDilli #IPL2024 pic.twitter.com/0HgHi67ZLQ— Delhi Capitals (@DelhiCapitals) April 8, 2024
இந்நிலையில் தற்போது ஹாரி புரூக்கிற்கு மாற்று வீரரை டெல்லி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி புரூக்கிற்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் லிசாட் வில்லியம்ஸ் டெல்லி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி 5 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி 4 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் டெல்லி ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.