மதுபான மோசடி வழக்கு தொடர்பாக, பிஆர்எஸ் எம்எல்சி கே.கவிதாவின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 23ஆம் தேதி வரை நீட்டித்து ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில், மார்ச் 15ஆம் தேதி தெலுங்கானா எம்எல்சி கவிதா வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அவரை கைது செய்தது.
இந்நிலையில், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்ற காவல் முடிவடைவதை தொடர்ந்து இன்று அவர் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, அவரின் காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் வாதிட்டப்பட்டது. ஆனால் இதற்கு கவிதாவின் வழக்கறிஞரான நிதேஷ் ராணா எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனிடையே கவிதாவை தனிப்பட்ட முறையில் வாய்மொழியாக பேச அனுமதிக்க மறுத்த நீதிபதி, அவர் தனது கருத்துக்களை எழுத்து வடிவில் அளிக்கலாம் என்று தெரிவித்தார்.