தமிழக முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும் தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் (வயது 98) முதுமையால் இன்று காலமானார்.
இவரது மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தமிழக முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்கள், உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) April 9, 2024
தமிழக முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான ஆர்.எம்.வீரப்பன் அவர்கள், உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி! எனக் குறிப்பிட்டுள்ளார்.