ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களை ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா நேரில் சந்தித்து வாழ்த்துக்களைக் கூறினார்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இந்த தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தாங்கள் விளையாடி 4 போட்டிகளில் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இன்றையப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இதற்கிடையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களை ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா நேரில் சந்தித்து வாழ்த்துக்களைக் கூறினார்.
आज OTS आवास पर राजस्थान रॉयल्स टीम के खिलाड़ियों से शिष्टाचार भेंट की तथा उनका उत्साहवर्धन करते हुए आगामी मैचों के लिए हार्दिक शुभकामनाएं प्रेषित की।#Rajasthan pic.twitter.com/RzrQEHogH9
— Bhajanlal Sharma (Modi Ka Parivar) (@BhajanlalBjp) April 9, 2024
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் லுஷ் மெக்ரம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களுடன் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் லுஷ் மெக்ரம், ராஜஸ்தான் அணி வீரர்களின் கையொப்பம் இட்ட பேட் மற்றும் ஜெர்சியை முதல்வர் பஜன்லால் சர்மாவுக்கு வழங்கியுள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பஜன்லால் சர்மா, ” இன்று நான் OTS இல்லத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்களைச் சந்தித்தேன், அவர்களை ஊக்குவித்து, வரவிருக்கும் போட்டிகளுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்தேன்,” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த சந்திப்பில் கேப்டன் சஞ்சு சாம்சனுடன் மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங், ராஜஸ்தான் ராயல்ஸ் துணைத் தலைவர் ராஜீவ் கண்ணா, பயிற்சியாளர் குமார் சங்கக்கார ஆகியோரும் கலந்து கொண்டனர்.