ஐ.பி.எல் வரலாற்றில் ஸ்டம்பிங் முறையில் 2 விக்கெட்டுகளை எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற அரிதான சாதனையை படைத்தார் சன் ரைசஸ் ஐதராபாத் வீரர் புவனேஷ்வர் குமார்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இந்த தொடரின் 23-வது போட்டி பஞ்சாபில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த் சன் ரைசஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்தது.
தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 180 ரன்களை எடுத்து 2 ரன்கள் இத்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் சன் ரைசஸ் ஐதராபாத் அணியின் வீரர் புவனேஸ்வர் குமார் சாதனை ஒன்றை படைத்துள்ளார். வேகபந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமார் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவானின் விக்கெட்டை ஸ்டம்பிங் மூலம் வீழ்த்தினார்.
பொதுவாக பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஸ்டம்பிங் முறையில் அவுட் ஆவார்கள். ஆனால் நேற்று வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமாருக்கு எதிராக தவான் ஸ்டம்பிங் முறையில் அவுட் ஆனார்.
புவனேஷ்வர் குமார் ஏற்கனவே கடந்த 2013 ஆம் ஆண்டு கொல்கத்தா வீரர் மன்விந்தர் பிஸ்லாவை ஸ்டம்பிங் முறையில் அவுட்டாக்கியுள்ளார்.
இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் ஸ்டம்பிங் முறையில் 2 விக்கெட்டுகளை எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற அரிதான சாதனையை புவனேஷ்வர் குமார் படைத்துள்ளார்.