தமிழகத்தில் பிறக்காத மறத்தமிழன் பிரதமர் மோடி! - அண்ணாமலை பேச்சு
Sep 12, 2026, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் பிறக்காத மறத்தமிழன் பிரதமர் மோடி! – அண்ணாமலை பேச்சு

Murugesan M by Murugesan M
Apr 10, 2024, 03:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடி தமிழக மக்களுக்காக சுற்றி சுழன்று உழைக்கிறார் என மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். இக்கூட்டத்தில்  நீலகிரி, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். இதில் கோவையில் அண்ணாமலையும், நீலகிரி தொகுதியில் எல்.முருகனும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். முன்னதாக பிரதமர் மோடிக்கு தாமரை மாலை அணிவித்து பாஜக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பாஜகவின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,

பிரதமர் மோடி தமிழக மக்களுக்காக சுற்றி சுழன்று உழைக்கிறார். ஒரு பறவை போல் பாசமாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். உலகில் எங்கு சென்றாலும், தமிழ் மொழி குறித்து பிரதமர் மோடி பேசுகிறார். அடுத்த 7 நாட்கள் கடுமையாக உழைக்க வேண்டும். 7 நாட்கள் பிரதமருக்காக நாம் அர்ப்பணிப்போம். 5 ஆண்டு நமக்காக பிரதமர் மோடி உழைப்பார். மோடியின் வெற்றிக்காக வீடு வீடாக சென்று திமுகவின் ஊழலை சொல்லுங்கள் என பாஜக நிர்வாகிகளை கேட்டுக் கொண்டார்.

உலகம் போற்றும் உத்தமர் பிரதமர் நரேந்திர மோடி என புகழாரம் சூட்டினார். கடுமையான உழைப்பாளி என்பதால் ஓய்வின்றி நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி மக்களை சந்தித்து வருகிறார். 400 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என தமிழக மக்கள் மோடியை ஆசீர்வதிக்க வேண்டும். தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற வேண்டும். தமிழர்களிடம் அடைக்கலம் தேடி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் பிறக்காத மறத்தமிழன் பிரதமர் நரேந்திர மோடி என அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழின் பெருமையை கும்மிடிப்பூண்டியை விட்டு தாண்டவிடாமல் செய்தது தி.மு.க. தான். ஜனநாயகத்தை பற்றி தி.மு.க.வினர் எங்களுக்கு பாடம் எடுக்கக் கூடாது. இந்தியாவிலேயே மோசமான நாடாளுமன்ற உறுப்பினர் உண்டு என்றால் அது ஆ.ராசா தான். பிரதமர் மோடியை பற்றி தரக்குறைவாக பேசிய ஆ.ராசா நீலகிரியில் டெபாசிட் கூட வாங்கக் கூடாது எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalai
Share
Tweet
SendShare
Previous Post

சன் ரைசஸ் ஐதராபாத் வீரர் புவனேஷ்வரின் புதிய சாதனை!

Next Post

தமிழகத்தில் இரு நகரங்களில் சதமடித்த வெயில்! 

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies