ஹாங்காங்கின் ஜோர்டான் பகுதியில் உள்ள நியூ லக்கி ஹவுஸ் என்ற கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 36 பேர் காயமடைந்தனர்.
ஹாங்காங்கின் ஜோர்டான் பகுதியில் உள்ள நியூ லக்கி ஹவுஸ் என்ற கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் இன்று காலை 7.53 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
பின்னர் தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலைத் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் ஒரு பெண் உள்பட 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 36 பேர் காயமடைந்தனர். மேலும் அந்த கட்டடத்திற்குள் சிக்கிக்கொண்டவர்களிடம் இருந்து உதவி கேட்டு அழைப்புகள் தொடர்ந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நியூ லக்கி ஹவுஸ் 1964 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கட்டடம் என்பது குறிப்பிடத்தக்கது.