தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணைத் தலைவர் தாமஸ் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணைத் தலைவராகப் பதவி வகித்து வருபவர் தாமஸ். இவர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
வீடு கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வரும் தாமஸ், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தேயிலை தோட்டங்களையும் வைத்துள்ளார்.
இந்த நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணைத் தலைவர் தாமஸ் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 6 பேர் கொண்ட குழுவினர் அவரது வீட்டில் காலை 8 மணி முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனை காலை முதல் இடைவிடாது நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு கருதி சோதனை நடைபெறும் தாமஸ் வீட்டைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.