“தண்ணீர் தராமல் நாட்டை நாசமாக்கிட்டேங்களே ஐய்யா” என திமுக அமைச்சர் மூர்த்தியிடம் கேள்வி கேட்ட விவசாயியை திமுக நிர்வாகிகள் அவரை தூக்கி வீசி, அங்கிருந்து விரட்டிவிட்டனர்.
மக்களவைத் தேர்தல் 2024 நாடு முழுவதும் களை கட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்களும், மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களும், தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
திமுக கூட்டணி சார்பில், மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து மேலூரில் பிரச்சாரம் செய்த திமுக அமைச்சர் மூர்த்தியிடம், “தண்ணி தரேன்னு சொல்லி நாட்டையே நாசமாக்கிடீங்களே ஐய்யா” என விவசாயி ஒருவர் கேள்வி கேட்டார்.
அப்போது, ஆவேசம் அடைந்த அமைச்சர் மூர்த்தி, அந்த விவசாயியை நோக்கி முட்டாள் என்று ஓப்பன் மைக்கிலேயே திட்டினார். போதாகுறைக்கு, திமுக நிர்வாகிகள் விவசாயியை தள்ளிவிட்டு விரட்டிவிட்டனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.