10 வருடங்களை ஒப்பிடும்போது நகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ஓட்டல் உணவுகள் மற்றும் பாக்கெட் உணவுகள் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படுவது 41.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
உலகமே டிஜிட்டல் மயமாகும் இன்றைய காலகட்டத்தில் உணவு முறைகளும் டிஜிட்டல் வாயிலாக வாங்கி சாப்பிடுவது அதிகமாகிவிட்ட்டது.
அதேபோல் ஓட்டல்களில் வாங்கி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதே போல் பாக்கெட் உணவுப் பொருட்களை வாங்கி உண்ணும் பழக்கமும் அதிகரித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய மக்கள் அனைவருமே வீடுகளிலேயே சமைத்தனர். ஆனால் இந்த 10 ஆண்டுகளாக வீடுகளில் சமைக்கும் பழக்கம் குறைந்து வருகிறது.
இதன் காரணமாக தற்போது ஓட்டல்களும் பெருகி விட்டன. பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவு பொருட்களின் விற்பனையும் அதிகரித்து விட்டது. இதன் காரணமாக இந்தியர்கள் உணவுக்கு செலவு செய்யும் தொகையும் 2 மடங்கு அதிகமாகியுள்ளது.
கடந்த 10 வருடங்களை ஒப்பிடும்போது நகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ஓட்டல் உணவுகள் மற்றும் பாக்கெட் உணவுகள் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படுவது 41.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களின் உணவு பட்ஜெட்டில் ஒரு பகுதியாக பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவு மற்றும் பானங்களுக்கான செலவு 16 % இருந்து 25 % அதிகரித்துள்ளது.
இந்த கால கட்டத்தில் நகரங்களில் உயர் வருவாய் கொண்ட மக்கள், பாக்கெட்டுகளில் விற்கப்படும் உணவுகளுக்கு 2.2 மடங்கு அதிகம் செலவு செய்கின்றனர்.
கடந்த 2022 ஆண்டை காட்டிலும் கடந்த 2023-ம் ஆண்டு ஒவ்வொரு குடும்பங்களின் மளிகை பட்ஜெட்டும் அதிகரித்துள்ளது. பானங்கள் மற்றும் பாக்கெட் உணவுகளுக்கு செலவு செய்யும் தொகை 9 % இருந்து 10.5 சதவீதமாகவும், பால் மற்றும் பால் பொருட்களுக்கான செலவு 7 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாகவும், பழங்கள் மற்றும் உலர் பழங்களுக்கான செலவு 3.4 சதவீதத்தில் இருந்து 3.8 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் உணவு தானியங்களுக்கான செலவு 6.6 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாகவும், காய்கறிகளுக்கான செலவு 4.6 சதவீதத்தில் இருந்து 3.8 சதவீதமாகவும், முட்டை, மீன், இறைச்சிக்கான செலவு 3.7 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாகவும், பருப்பு வகைகளுக்கான செலவு 1.9 சதவீதத்தில் இருந்து 1.2 சதவீதமாகவும், சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றுக்கான செலவு 1.2 சதவீதத்தில் இருந்து 0.6 சதவீதமாகவும் குறைந்துள்ளது.