கனடா தேர்தலில் இந்தியா தலையிடவில்லை என அந்நாட்டு உளவுத்துறை தெரிவித்துள்ளது.
கனடா தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரித்து வரும் கனேடிய அதிகாரிகள், தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் வகையில் இந்தியா தலையிட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
2021 தேர்தலின் போது, இந்திய தலையிட்டதற்கான ஆதாரங்களை நாங்கள் பார்க்கவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கனடா உளவுத்துறை கூறியுள்ளது.
மேலும், 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் சீனாவின் தலையீடு குறித்தும் அறிக்கையில் அந்த குழு குறிப்பிட்டுள்ளது.