ஊழல் பல்கலைக்கழகத்திற்கு பெயரை மு.க.ஸ்டாலின் என்று வைத்தால் அதில் வேந்தராக மோடி இருப்பார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,
எடப்பாடி பழனிசாமி பழைய பஞ்சாங்கத்தையே பேசி வருகிறார். பாஜக தலைவர்கள் ரோடு ஷோ செல்லவில்லை, மக்களை தரிசனம் செய்யவே பாஜக தலைவர்கள் தமிழகம் வருகிறார்கள்.
சமூக வலைதளங்களில் திமுக விளம்பரத்திற்காக ரூ 7,39,93,750 செலவு செய்துள்ளது. பாப்புலர் எம்பவர்மண்ட் நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் என்று நிறுவனத்திற்கு வழங்கியுள்ளனர். இந்த நிறுவனத்தின் 99 சதவீதம் பங்கு முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் இடம் தான் உள்ளது.
தமிழ்நாட்டில் பிரிவினை பேசுகின்ற சக்தியை அடக்குவார் என்ற கேரண்டியை பிரதமர் மோடி கொடுத்துள்ளார், தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஒழிப்பேன் எனப் பிரதமர் மோடி கேரண்டி கொடுத்துள்ளார்.
ஸ்டாலின் கனவுக்கு எல்லாம் கேரண்டி கொடுக்க முடியாது. ஸ்டாலின் கனவில் வாழ்வில் வாழ்கிறார். திமுக ஆட்சியில் தமிழகத்தில் பட்டியலின மக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறார்கள் எனக் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் இது வரை பட்டியிலின தலைவர்கள் ஏன் தேசிய கொடியை ஏற்றவில்லை எனக் கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் வெள்ளை சட்டை அணிந்து சாராயம் விற்பவர்களும் சமூக விரோதிகள் திமுக.
வேங்கை வயல் சம்பவம் நடைபெற்று இத்தனை நாள் ஆகியும், இதுவரை குற்றவாளிகளை ஏன் பிடிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினார். பாஜக மீது கடந்த 50 ஆண்டுகளாக போலி பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பிம்பம் 2024 தேர்தலுக்கு பின்பு சுக்குநூறாக உடையும் எனத்தெரிவித்தார். திமுக ஆட்சியில் ஜனநாயகம் இல்லை. திமுக ஆட்சியில் பத்திரிக்கை சுதந்திரம் இல்லை எனக் குற்றம் சாட்டினார். திமுகவுக்கு எதிராக பேசும் நபர்களின் தொலைபேசி கண்காணிக்கப்படுகிறது.
ஊழல் பல்கலைக்கழகத்திற்கு பெயரை மு.க.ஸ்டாலின் என்று வைத்தால் அதில் வேந்தராக மோடி இருப்பார், பல்கலைக்கழகத்தில் நடக்கும் பிரச்சினைகளை வேந்தர்கள்தான் வெளிக்கொண்வருவார்கள். ஜனநாயகத்தை பற்றி பேச முதல்வர் ஸ்டாலினுக்கு தகுதி இல்லை எனக் குற்றம் சாட்டினார்.
ஜூன் 4-ம் தேதி கொங்கு மண்டலம் யாருக்கு என்பதை பார்த்துவிடலாம் எனத் தெரிவித்தார். பண அரசியல் என்ற பேய், கோயம்புத்தூரிலிருந்து ஓட்டப்படும் என தெரிவித்தார். ஓரே நாடு, ஓரே தேர்தல் கண்டிப்பாக வரும், நதி நீர் இணைக்கப்படும் எனத் தெரிவித்தார். நான் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்தார்.
“பாஜக உள்ளே வந்தால் அனைத்தும் காணாமல் போய்விடும் என்று 60 ஆண்டுகளாக ஒரு பிம்பத்தை திமுக உருவாக்கி வைத்துள்ளார்கள்.
உதாரணத்துக்கு, உதயநிதி ‘மாமன்னன்’ என்று படம் எடுப்பார். அதில் இரண்டு ஊர் இருக்கும். தெற்கு ஊரில் இருப்பவர்கள் எல்லாம் நல்லவர்கள். வடக்கு ஊரில் இருப்பவர்கள் எல்லாம் கெட்டவர்கள். அப்புறம் இதில் கெட்டவர்கள் ‘ஜி’ என்று பேசுவார்கள்.
இப்படி அரைத்த மாவையே அரைக்கிறார்கள். நான் அந்தப் படத்தை பார்க்கவில்லை. அதைவிட நிறைய வேலை இருக்கிறது. பார்த்தவர்கள் சொன்னார்கள்.
சினிமாவில் ஒரு நடிகர் படம் நடித்துவிட்டால் மும்பையில் போய் செட்டில் ஆகிவிடுவார். கேட்டால் குழந்தைகள் மும்பையில் படிப்பதால் அங்கே செட்டில் ஆவதாக சொல்வார்கள்.
சமூக நீதி படம் எடுக்கிற நடிகர்கள், இயக்குநர்கள் எல்லாம் ஓசிக்காகவா எடுக்கிறார்கள், இல்லை. அனைத்தும் பணம். ஒவ்வொன்றுக்கும் பட்ஜெட் போட்டு எடுக்கிறார்கள். இவர்கள் என்ன சமூக நீதியை சொல்ல போகிறார்கள்.
சினிமா மேல் எனக்கு எந்த கோபமும் இல்லை. ஆனால், சினிமாவை கொண்டு மாமன்னன் போன்ற பிரச்சார திரைப்படத்தை எடுக்க பயன்படுத்தினால், அதை கேட்க வேண்டிய நேரம் இது.
நேற்று ஒரு குழந்தைக்கு பெயர் வைக்க உதயநிதி ஸ்டாலினிடம் கேட்கிறார்கள். அந்தக் குழந்தைக்கு என்ன பெயர் வைத்தார் தெரியுமா..? கமல் நடித்த விக்ரம் படத்தில் போதைப்பொருள் விற்கும் ரோலக்ஸ் பெயரை வைத்துள்ளார்.
பெயர் வைக்க சொன்னால்கூட போதைப்பொருள் மாபியா பெயரா வைப்பது? இப்படி எல்லாம் செய்துவிட்டு அரசியல் மாற்றம் பற்றி பேசுகிறார்” என்று விமர்சித்தார்.