பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் தமிழங்கம் அடைந்த பலன்கள் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றத்தில் இருந்து பாரத மக்களின் நலனுக்காக பல திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்து வருகிறார்.
அந்த வகையில் தூய்மை இந்தியா திட்டமானது நமது ஆரோகியத்திற்கு பெரும் பங்கு வகிக்கிறது. இந்த தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள பல கிராமப்புறங்களில் இலவசமாக கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.
இதில் 2014 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டுவரை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் அரக்கோணம் தொகுதியில் 1,78,306 இலவச கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.
ஆரணி தொகுதியில் 206 இலவச கழிப்பறைகள், தென் சென்னை தொகுதியில் 5,739 இலவச கழிப்பறைகள், சிதம்பரம் தொகுதியில் 2,82,666 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
அதேபோல் கோயம்பத்தூர் தொகுதியில் 51,387 இலவச கழிப்பறைகள், கடலூர் தொகுதியில் 2,01,601 இலவச கழிப்பறைகள், தர்மபுரியில் 147 இலவச வழிப்பறைகள், திண்டுக்கல் தொகுதியில் 1,90,825 இலவச கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
மேலும் கள்ளக்குறிச்சி தொகுதியில் 317 இலவச கழிப்பறைகளும், காஞ்சிபுரம் தொகுதியில் 331 இலவச கழிப்பறைகளும், கன்னியாகுமரி தொகுதியில் 4,946 இலவச கழிப்பறைகளும், கரூர் தொகுதியில் 1,86,177 இலவச கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன.
மேலும் மயிலாடுதுறை தொகுதியில் 1,06,466 இலவச கழிப்பறைகளும், நாமக்கல் தொகுதியில் 1,61,070 இலவச கழிப்பறைகளும், நீலகிரி தொகுதியில் 1,55,336 இலவச கழிப்பறைகளும், பெரம்பலூர் தொகுதியில் 1,99,107 இலவச கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன.
பொள்ளாச்சி தொகுதியில் 1,08,997 இலவச கழிப்பறைகளும், ராமநாதபுறம் தொகுதியில் 358 இலவச கழிப்பறைகளும், சேலம் தொகுதியில் 75,839 இலவச கழிப்பறைகளும், சிவகங்கை தொகுதியில் 1,80,494 இலவச கழிப்பறைகளை கட்டப்பட்டுள்ளன.
அதேபோல் ஸ்ரீபெரம்பத்தூர் தொகுதியில் 40,541 இலவச கழிப்பறைகளும், தென்காசியில் 377 இலவச கழிப்பறைகளும், தஞ்சாவூரில் 2,02,227 இலவச கழிப்பறைகளும், தூத்துக்குடியில் 1,44,172 இலவச கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன.
மேலும் திருவண்ணாமலை தொகுதியில் 2,27,450 இலவச கழிப்பறைகளும், விழுப்புரத்தில் 1,98,976 இலவச கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன.