செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஐபிஎல் கோப்பை வெல்ல உள்ள அணிகள் எது என்பது குறித்த லிஸ்ட் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரில் 25 வது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இந்த வருடம் எந்த அணி வெற்றி பெறும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில் அணைத்து அணிகளுக்கு கிட்டத்தட்ட சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஐபிஎல் கோப்பை வெல்ல உள்ள அணிகள் எது என்பது குறித்த லிஸ்ட் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அதன்படி இந்த வருடம் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சீசன் மற்றும் 2037 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறும் என்றும், 2026 மற்றும் 2035 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த லிஸ்டை கண்டவுடன் அனைவரின் கண்களுக்கு இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளதா என்று தேடியிருக்கும், அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2029 மற்றும் 2038 ஆம் ஆண்டுகளில் கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்லதா பஞ்சாப் கிங்ஸ் அணி 2028 மற்றும் 2040 ஆம் ஆண்டுகளில் வெற்றி பெறும் என்றும், டெல்லி கேபிட்டல்ஸ் அணி 2030 மற்றும் 2039 ஆம் ஆண்டு வெற்றி பெறும் என்றும், லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணி 2033 மற்றும் 2044 ஆம் ஆண்டு வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.