ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இதில் 25-வது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி :
ரோகித் சர்மா, சூரியகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டியா, இஷான் கிஷன், திலக் வர்மா, டிம் டேவிட், முகமத் நபி, ரோமாரியோ ஷெப்பர்ட், பியூஸ் சாவ்லா, கோட்சீ, பும்ரா.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி :
பாஃப் டு பிளெசீ, விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மாக்சுவெல், கேமரன் கிரீன், தினேஷ் கார்த்தி, அனுஜ் ராவத், அல்ஸாரி ஜோசப், மயங்க் ஜிதேந்தர், முகமது சிராஜ், யாஷ் தயாள்.