தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சில சமூக விரோதிகள் சட்டவிரோதமாக மதமாற்ற நிகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை, இந்து அமைப்புகள் முயறிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மதமாற்ற பிரச்சாரம் சத்தமின்றி நடைபெற்று வருகிறது.
அனைவரும் தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், சென்னையில் ஒரு குரூப் மதமாற்ற சிந்தனையை தூண்டும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை தாம்பரம் – சென்னை பீச் மின்சார ரயிலில் சிலர் அடிக்கடி மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது.
இதனிடையே, பம்மல் பகுதியை சேர்ந்த பெயர் தெரியாத கிறிஸ்தவர் இருவர் மதமாற்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இரயிலில் இருந்தவர்கள் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து, அந்தப்பகுதி இந்து முன்னணி பொறுப்பாளர்கள் விரைந்து சென்று, இரயிலில் மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக இரயில்வே காவல் நிலையத்தில் சட்டப்படி உரிய புகாரும் அளித்தனர்.
இதனால், மத மாற்ற நிகழ்வில் சம்பந்தப்பட்ட இருவரை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.