தொடர்ந்து வளர்ந்து வரும் கேமிங் துறையை டெவலப் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பிரதமர் மோடி, தனது அரசு இதுபோல புதிதாக வளரும் துறைகளுக்கு ஆதரவு தரும் என்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அணைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த பிரச்சாரங்களுக்கு நடுவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கேம் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாரத பிரதமர் மோடி நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களை சந்தித்துள்ளார். மோர்டல், தக், பயல் கேமிங், மித்பட் மற்றும் கேமர்ஃபிலீட் ஆகியோர் பிரதமர் மோடியைச் சந்தித்தனர்.
மேலும், அனிமேஷ் அகர்வால், மிதிலேஷ் படன்கர், பயல் தாரே, நமன் மாத்தூர் மற்றும் அன்ஷு பிஷ்ட் ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.
அவர்கள் தங்கள் அனுபவங்களையும் வாழ்க்கையில் எதிர்கொண்ட போராட்டங்களையும் பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டனர். மேலும், இந்த டிஜிட்டல் ஸ்பேஸ் தங்களுக்கு எப்படி உதவியது அதன் மூலம் வாழ்க்கையில் எப்படி முன்னேறினார்கள் என்பதையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
கேமிங் மற்றும் ஆன்லைன் சூதாட்டம் குறித்தும் இதில் விவாதித்துள்ளனர். மேலும், கேமிங் துறையில் பெண்கள் மிகக் குறைவாக உள்ளது குறித்தும் கலந்துரையாடி உள்ளனர். கேமிங் துறைக்கு மத்திய அரசு பல நன்மைகளைச் செய்துள்ளதாகக் கூறி அவர்கள் பாரத பிரதமர் மோடிக்கு நன்றியும் தெரிவித்தனர்.
தொடர்ந்து வளர்ந்து வரும் கேமிங் துறையை டெவலப் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பிரதமர் மோடி, தனது அரசு இதுபோல புதிதாக வளரும் துறைகளுக்கு ஆதரவு தரும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கேமும் விளையாடியுள்ளார். இதில் பிரதமர் மோடி வீடியோ கேம் விளையாடும் திறனைப் பார்த்து அங்கிருந்த கேமர்களே கூட வியந்து கைதட்டினர். இறுதியாக கேமிங் துறைக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் நிச்சயம் தனது அரசு வழங்கும் என்று பிரதமர் மோடி அவர்களுக்கு உறுதி அளித்தார்.