கோல்டன் பாம் விருது பட்டியலில் இந்தியத் திரைப்படம்!
Sep 10, 2025, 01:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோல்டன் பாம் விருது பட்டியலில் இந்தியத் திரைப்படம்!

Web Desk by Web Desk
Apr 12, 2024, 02:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேன்ஸ் திரைப்பட விழாவின் ‘கோல்டன் பாம்’ விருதுக்கான போட்டி பிரிவில் கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய இயக்குநா் பாயல் கபாடியாவின் ‘ஆல் வி இமேஜின் ஏஸ் லைட்’ எனும் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

77-ஆவது கேன்ஸ் திரைப்பட விழா வரும் மே 14 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற உள்ளது.

உலகம் முழுவதும் இருந்து திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் இந்த விழாவில் கலந்துகொள்ள உள்ளனர். இதன் விருது வழங்கும் விழாவில் பல்வேறு மொழித் திரைப்படங்கள் திரையிடவுள்ளது. இந்த விழாவின் தொடக்கத்தில் ‘தி செகன்ட் ஆக்ட்’ திரைப்படம் திரையிடப்படுகிறது.

இந்நிலையில், கேன்ஸ் நகரில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த ஆண்டிற்கான திரைப்பட விழாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரைப்படங்களின் அதிகாரபூர்வ பட்டியலை விழாக் குழுவினர் வெளியிட்டனர்.

இந்த பட்டியலில் இந்திய வம்சாவளி பிரிட்டன் இயக்குநரான சந்தியா சுரியின் ‘சந்தோஷ்’ திரைப்படம் உள்பட 14 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து ‘கோல்டன் பாம்’ விருதுக்கான போட்டி பிரிவில் கடந்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய இயக்குநர் பாயல் கபாடியாவின் ‘ஆல் வி இமேஜின் ஏஸ் லைட்’ எனும் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படமானது கடற்கரை நகரை நோக்கிய சாலைப் பயணத்தில் ஒரு மாய வனப்பகுதியை எதிர்கொள்ளும் 2 செவிலியர்கள், தங்களின் கனவை நனவாக்கிக் கொள்கின்றனர் என்று கற்பனைக் களத்துடன் கூடிய பயணக் கதையாகும்.

முன்னதாக, கடந்த 1983 ஆம் ஆண்டு பழம்பெரும் இயக்குநர் மிரினால் சென் இயக்கிய ‘காரீஜ்’ திரைப்படம் ‘கோல்டன் பாம்’ விருதுக்கான போட்டிப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டது.

கடந்த 1946 ஆம் ஆண்டு வெளியான சேத்தன் ஆனந்தின் நீச்சா நகர் திரைப்படம் மட்டுமே கேன்ஸ் திரைப்பட விழாவில் விருதை வென்ற ஒரே இந்திய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Indian film on the Golden Palm Award list!
ShareTweetSendShare
Previous Post

2024 ஐபிஎல் : புள்ளி பட்டியல்!

Next Post

லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் மோதல்!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies