மொரீஷியஸ் நாட்டிற்கு ஏப்ரல் மாதத்திலிருந்து விமான சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை விமான சேவை தொடங்கப் பட்டிருக்கிறது .
சென்னையிலிருந்து மொரீஷியஸ் நாட்டிற்கு சில காரணங்களால் விமான சேவை தொடங்கப்படாமல் இருந்தது.
இதற்கிடையே, சென்னையில் இருந்து மொரீசியஸ் நாட்டிற்கு இன்று அதிகாலை முதல் விமானம் 173 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. சென்னை – மொரீஷியஸ் இடையேயான விமான சேவையை ஏர் மொரீஷியஸ் நிறுவனம் வாரம் தோறும் இயக்குகிறது என்பது குறிப்பிடத் தக்கது.