நாடு முழுவதும் பிரதமர் மோடி அலை வீசுவதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
வரும் 19-ம் தேதி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவித்தும், விளவங்கோடு சட்டமன்ற பாஜக வேட்பாளர் நந்தினிக்கு ஆதரவு தெரிவித்தும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இதனைத்தொடர்ந்து, தக்கலை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து, மேட்டுக்கடை வரையிலான ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வாகனப் பேரணி நடைபெற்றது.
அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடு வளர்ச்சி பெற வேண்டும் என்றால் மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும். பாஜக வெற்றி பெற வேண்டும். நாடு முழுவதும் பாஜக அலை வீசுகிறது. மோடி அலை வீசுகிறது என்றார்.