இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரில் ஆஸ்திரேலியா 5-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரில் விளையாடி வருகிறது.
இந்த போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு ஒரு சோதனை போட்டியாக அமைந்தது. இந்த தொடரின் முதல் போட்டி ஏப்ரல் 6 ஆம் தேதியும், இரண்டாம் போட்டி ஏப்ரல் 7 ஆம் தேதியும், மூன்றாவது போட்டி ஏப்ரல் 10 ஆம் தேதியும், நான்காவது போட்டி ஏப்ரல் 12 ஆம் தேதியும் நடைபெற்றது.
முதல் போட்டியில் இந்தியா 1-5 என்ற கோல் கணக்கிலும், இரண்டாவது போட்டியில் இந்தியா 2-4 என்ற கணக்கிலும் தோல்வியை அடைந்தது.
அதேபோல் மூன்று மற்றும் நான்காவது போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் கடைசி போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் கடைசி போட்டி இன்று நடைபெற்றது. இதில் 2-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரை முழுமையாக ஆஸ்திரேலியா கைப்பற்றியது.