பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு! - மோடி கேரண்டி என்ற பெயரில் தேர்தல் அறிக்கை!
Mar 15, 2026, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு! – மோடி கேரண்டி என்ற பெயரில் தேர்தல் அறிக்கை!

Murugesan M by Murugesan M
Apr 14, 2024, 10:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி  வெளியிட்டார். மோடி கேரண்டி என்ற பெயரில் இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் 543 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணப்படுகிறது. இந்நிலையில் முதற்கட்டமாக 39 மக்களவைத் தொகுதிகளை கொண்ட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 1 தொகுதிக்கும்வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ஒவ்வொரு கட்சியும் தங்களின் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளை ஏற்கனவே வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று காலை 9.30 மணிக்கு டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். மோடி கேரண்டி என்ற பெயரில் இந்த தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது. இந்நிகழ்வில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், பாஜக  மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முன்னதாக  சட்டமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு அவரத திருவுரு சிலைக்கு, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினாரகள்.

கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசின் திட்டங்களில் பயனடைந்த பிரதமரின் வீடு வழங்கும் திட்டம்,  உஜ்வாலா, ஜல் ஜீவன், விவசாய காப்பீடு முதல் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது. இந்த அறிக்கைக்காக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான 27 பேர் கொண்ட குழுவை பாஜக தலைமை அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பிடித்துள்ள முக்கிய வாக்குறுதிகள்:

1. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை’ அமல்படுத்தப்படும்,
2. 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு ரூ. 5 லட்சம் மருத்துவக் காப்பீடு,
3. பெண்களுக்கு ஒரு ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்,
4. நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்,
5. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேசன் பொருள்கள் வழங்கப்படும்,
6. சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் உஜ்வாலா திட்டம் நீட்டிக்கப்படும்,
7. பொது வாக்காளர் பட்டியல் முறை அமல்படுத்தப்படும்,
8. 2025-ஆம் ஆண்டு ‘பழங்குடியினரின் பெருமை ஆண்டாகக்’ கடைபிடிக்கப்படும்,
9. பெண்கள், விவசாயிகள், ஏழைகள், இளைஞர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்படும்,
10. வேலைவாய்ப்பு, முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்,
11. அடுத்த 5 ஆண்டுகளில் கிராமங்களில் குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பிடித்துள்ளன.

Tags: BJP election manifesto release!
ShareTweetSendShare
Previous Post

இன்றைய பெட்ரோல் விலை!

Next Post

அனைவரின் வாழ்வில், அன்பும், அமைதியும் செழிக்கட்டும்! – அண்ணாமலை தமிழ் புத்தாண்டு வாழ்த்து!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies