தமிழ் புத்தாண்டு, அனைவருக்கும் நல் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், அளிக்கட்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் துவக்க நாளை தமிழ் புத்தாண்டாக ஆண்டுதோறும் நாம் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டு இன்று உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் புத்தாண்டு, அனைவருக்கும் நல் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், அளிக்கட்டும்.
உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வரும் புத்தாண்டு, அனைவருக்கும் நல் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், அளிக்கட்டும். அனைவரின் வாழ்விலும், அன்பும், அமைதியும் செழிக்கட்டும். தமிழகத்தைச் சூழ்ந்திருக்கும் காரிருள் அகன்று,… pic.twitter.com/Ay6esRyAUi
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) April 14, 2024
அனைவரின் வாழ்விலும், அன்பும், அமைதியும் செழிக்கட்டும். தமிழகத்தைச் சூழ்ந்திருக்கும் காரிருள் அகன்று, அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நல்ல மாற்றம் விரைவில் பிறக்கட்டும். இனிய குரோதி தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.