புத்தாண்டு, வைசாகி, விஷு, பிசுப், பஹாக் பிஹு, பொய்லா பொய்ஷாக், வைஷாகாதி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் “வைசாகி, விஷு, பிசுப், பஹாக் பிஹு, பொய்லா பொய்ஷாக், வைஷாகாதி மற்றும் புத்தாண்டு ஆகிய பண்டிகைகளின் புனிதமான நேரத்தில், இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
On the auspicious occasion of Vaisakhi, Vishu, Bishub, Bahag Bihu, Poila Boishakh, Vaishakhadi and Puthandu, I extend warm greetings and good wishes to all Indians living in India and abroad. pic.twitter.com/1LoW7xbS8t
— President of India (@rashtrapatibhvn) April 13, 2024
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் இந்த பண்டிகைகள் நமது பன்முக பல்வேறு கலாச்சார பாரம்பரியத்தின் துடிப்பான வெளிப்பாடுகள் ஆகும். இந்த பண்டிகைகள் அனைத்தும் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் செய்தியை வழங்குகின்றன.
சமூக நல்லிணக்கத்தின் அடையாளங்களான இந்த விழாக்கள் மக்களிடையே, புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் உருவாக்குகின்றன. இந்த விழாக்கள் மூலம், விவசாயிகளின் கடின உழைப்பை கௌரவிப்பதுடன், அவர்களுக்கு எங்கள் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்விழாக்கள் அனைவரின் வாழ்விலும் செழிப்பையும், அமைதியையும் கொண்டு வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்“ என்று பதிவிட்டுள்ளார்.