அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு, குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று அவருக்கு பணிவான அஞ்சலிகள்.
பாரதத்தின் சிறந்த மகனான அம்பேத்கர், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர் மட்டுமல்ல, சமூக நீதிக்காகவும் பாடுபட்டவர்.
Humble tributes to Dr. BR Ambedkar on his birth anniversary today.
Babasaheb, a great son of Bharat, was not only the architect of the Indian Constitution but also a champion of social justice. He pioneered social change to build an egalitarian India, through a constitutional…
— Vice President of India (@VPIndia) April 14, 2024
சட்டத்தின் ஆட்சி, சிவில் உரிமைகள், பாலின சமத்துவம் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம், சமத்துவ இந்தியாவைக் கட்டியெழுப்ப சமூக மாற்றத்திற்கு அவர் முன்னோடியாக இருந்தார்.
டாக்டர். அம்பேத்கரின் இலட்சியங்களை ஏற்றுக்கொண்டு, நீதி மற்றும் சமத்துவ சமுதாயம் பற்றிய அவரது பார்வையை நிறைவேற்ற பாடுபடுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.