சமுதாயத்தில் தங்களுக்கான அடையாளங்களை இழந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகளையும், பெருமைகளையும் வாங்கி கொடுத்தவர் பாபா சாஹேப் அம்பேத்கர். அவரது பிறந்த தினம் இன்று. அவரது வாழ்க்கை பயணம் குறித்து சற்று திரும்பி பார்ப்போம்.
பிரிட்டிஷ் ராணுவத்தில் சுபேதாராகப் பணியாற்றிய ராம்ஜி மலோஜி சக்பால் என்பவருக்கு 14-வது மகனாக பிறந்தவர்தான் அம்பேத்கர். துரதிஷ்டமாக 6 வயதில் தாயை இழந்தார். இதனால், தனது அத்தையின் பராமரிப்பில் வளர்ந்தார். பள்ளி இறுதி வகுப்பு முடிந்த நிலையில், 1907-ல் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்தார்.
தனது தந்தை மறைந்த நிலையில், அமெரிக்கா சென்றவர், அங்கு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார். அடுத்து, 1916-ல், பி.ஹெச்.டி. பட்டமும் பெற்றார்.
சில காலம் கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர், 1923-ல் மும்பை உயர் நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பணியை வெற்றிகரமாகத் தொடங்கினார்.
திரும்பிய திசை எங்கும் தீண்டாமை கொடுமை தாண்டவம் ஆடியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினார் அம்பேத்கர். விளைவு, 1935 -ல் அக்டோபர் 15-ம் தேதி நாசிக் மாவட்டம் யேலாவில் நடைபெற்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான மாகாண மாநாட்டில் உரிமைகளுக்காக அவரது குரல் ஓங்கி ஒலித்தது.அதன் எதிரொலியாக 1936 ம்- ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தொழிலாளர் கட்சியைத் தொடங்கினார்.
அவரது அர்ப்பணிப்பு காரணமாக, இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அரசியலமைப்பின் வரைவுக் குழுவின் முதல் தலைவராகவும் இருந்தார். அம்பேத்கரின் அரும் செயல்களால், ராஜ்யசபாவிற்கு நியமிக்கப்பட்டார். 1955-ல் இறக்கும் வரை ராஜ்யசபா உறுப்பினராக பதவி வகித்தார்.
அம்பேத்கரின் சுயசரிதை, விசாவுக்காக காத்திருக்கிறது என்ற தலைப்பில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பாடப்புத்தமாக வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல் முனைவர் பட்டமும், இந்தியாவுக்கு வெளியே முனைவர் பட்டம் பெற்று சரித்திர சாதனைபடைத்தார். ஒரு நாளைக்கு 14 மணி நேரம் என்ற வேலை திட்டத்தை 8 மணி நேரமாக குறைக்க காரணமாக இருந்தார்.
தீண்டாண்மைக்கு எதிராக,சத்தியாகிர போராட்டத்தை வெற்றிப் போராட்டமாக மாற்றிக்காட்டியதால், காந்தியின் மனதில் இடம் பிடித்தார்.
அன்று சமூகத்தில் மிக கொடிய நோயாக பரவிக்கிடந்த “சாதி” என்ற நோயை அழிக்க பிள்ளையார் சுழி போட்டவர் சாட்சாத் இதே அம்பேத்கர்தான். ஒடுக்கப்பட்ட மக்களுக்களுக்கு கல்வி, அரசியல் அதிகாரத்தை பெற்று கொடுக்க நித்தமும் உழைத்தார்.
சட்ட நிபுணர், அரசியல்வாதி, பொருளாதார நிபுணர், எழுத்தாளர், ஆசிரியர், இந்திய அரசியலமைப்பின் தலைமைச் சிற்பி என பன்முக தன்மையுடன் ஜொலித்தார்.
தனது வாழ்நாளின் எஞ்சி பகுதிகளை சமத்துவம், சகோதரத்துவம், மனிய நேயத்திற்காக அர்பணித்தார். இதனாலே, மனிதப் புனிதர் என அழைக்கப்படுகிறார்.
இப்படி, தனது வாழ்நாளை நாட்டிற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தியாகம் செய்த அம்பேத்கர் பிறந்த நன்நாளில் போற்றி வணங்குவோம்.