அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு, சிங்கப்பூர் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேன்னன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்தநாளான இன்று புதுதில்லியில் உச்சநீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு, சிங்கப்பூர் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனனுடன் இணைந்து இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்டின் மனைவி கல்பனா தாஸ் உள்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்வில் பேசிய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்,
நமது அரசமைப்பு சாசனத்தின் சிற்பி அம்பேத்கர், சமூகத்தில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்திய புரட்சியாளர் அவர். அரசமைப்பு சாசனத்தை எழுதும்போது அவர் பதிவு செய்த கருத்துகள் இன்றளவும் சமூகத்திற்கு தேவைப்படுவதாக தெரிவித்தார்.