தேர்தல் பாதுகாப்புக்காக கூடுதல் துணை ராணுவம்! - இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்! - சத்யபிரதா சாகு
Oct 26, 2025, 04:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் பாதுகாப்புக்காக கூடுதல் துணை ராணுவம்! – இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்! – சத்யபிரதா சாகு

Web Desk by Web Desk
Apr 14, 2024, 06:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் வீடியோ கண்காணிப்பு குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்

காஞ்சிபுரத்தில் 1400 கிலோ தங்கம் பிடிபட்டது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சாகு தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு,

17ம் தேதிக்குள் தபால் வாக்குகள் தொடர்பாக பணி அனைத்து பணிகளும் நிறைவு பெறும். தபால் வாக்கு அளிக்க விண்ணப்பித்துள்ள 61 ஆயிரம் காவலர்களின் இதுவரை 26 ஆயிரம் பேர் தபால் வாக்கு செலுத்தியுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 71 ஆயிரம் ராணுவ வீரர்கள் தபால் மூலமாக வாக்களிக்க உள்ளனர். இவர்கள் தங்களின் வாக்கு சீட்டுகளை தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.

சர்வீஸ் வாக்காளர்கள் என்று அழைக்கப்படும் ராணுவ வீரர்கள் அனைவரும் ஜூன் 4 தேதி காலை 8 மணிக்கு முன் தங்களின் வாக்கு சீட்டுகளை தேர்தல் நடத்தும் அதிகாரிடம் வந்து சேருமாறு தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.

வாக்குப்பதிவு அன்று அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் alphabet வரிசையில் உள்ள வாக்காளர் பட்டியல் வழங்கப்படும்.  வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் உள்ள உதவி அலுவலரிடம் தங்களது வரிசை எண் தொடர்பான தகவல்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் 18ம் தேதி முதல் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படும்.

வாக்குப்பதிவுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில் வீடியோ கண்காணிப்பு குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 10 கம்பெனி துணை ராணுவ படையினர் வேண்டும் என்று டிஜிபி கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்’ எனத் தெரிவித்தார். ஏற்கனவே தமிழகத்தில் 190 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Brinks india pvt என்ற பெயர் பெட்டியில் 1400 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அதிகாரி முதல் கட்ட தகவல் அளித்துள்ளார். இது தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர். வாக்குப்பதிவு நாள் அன்று விளம்பரம் வெளியீட 17ம் தேதிக்கு முன்பாக அனுமதி பெற வேண்டும். 17ம் தேதிக்கு முன்பாக தேர்தல் ஊடக சான்று குழுவினரிடம் விளம்பரங்களை சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் 952 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பல்வேறு பொருட்களும், 2021 சட்டமன்ற தேர்தலில் 466 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது எனத் தெரிவித்தார்.

Tags: tn ceoAdditional paramilitary for election security! - The Election Commission of India will decide! - Satyaprada Sakhu
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகாவில் ரயிலில் இருந்து ஆற்றில் குதித்த நபர் உயிரிழப்பு!

Next Post

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 162 ரன்கள் இலக்கு!

Related News

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

இந்திய ஜனநாயகம் பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு – மச்சாடோ

ஸ்பெயின் : வெள்ளத்தில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரணி!

தஞ்சாவூர் : பூங்காவில் மழை நீருடன் தேங்கி நிற்கும் கழிவுநீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies