கர்நாடக மாநிலத்தில், பி.எச்.சாலையில் ரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ரயிலில் இருந்து ஒரு வாலிபர் ஆற்றில் குதித்து உயிரிழந்தார்
கர்நாடக மாநிலத்தில், பி.எச்.சாலையில் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் துங்கா ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ரயிலில் இருந்து ஒரு வாலிபர் ஆற்றில் குதித்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தால், சக பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி ரயில் பயணிகள், ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த துங்கா போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவமொக்கா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த வாலிபர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுபற்றி துங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.