தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்கும். 19ம் தேதி விடுமுறை இல்லை எனத் தெரிந்தால் 18ம் தேதியே புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய சத்யபிரதா சாகு,
“தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்கும். 19ம் தேதி விடுமுறை இல்லை எனத் தெரிந்தால் 18ம் தேதியே புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் 1950 என்ற புகார் எண்ணுக்கு ஊழியர்கள் புகார் அளிக்கலாம். தமிழகத்தில் வருகின்ற 17ம் தேதி பிரச்சாரம் செய்ய கடைசி நாள் என்பதால் மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிகிறது.
“92.80 சதவீதம் பூத் சிலிப் வழங்கபட்டுள்ளது, மீதமுள்ளவர்களுக்கு இன்று பூத் சிலிப் வழங்கப்படும். தபால் வாக்கு நாளையுடன் நிறைவடைகிறது. வாக்கு பதிவு அன்று காட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும். பார்வை திறன் குறைபாடு உள்ள வாக்காளர்களுக்கு பிரெய்லி முறை, வாக்கு பதிவு இயந்திரத்தில் இடம் பெற்று உள்ளது.
17 ம் தேதி மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. அதற்கு பிறகு பிரச்சாரம் செய்ய அனுமதிக்க முடியாது. ஒரு தொகுதியில் தேர்தலை நிறுத்த – இ வி எம் கோளாறு, ஆர் ஒ, டி இ ஒ மற்றும் பார்வையாளர் ஆகியோரின் பரிந்துரைகளின் பெயரில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.
18 ம் தேதி மாலைக்குள் வாக்கு பதிவு இயந்திரங்கள் வாக்கு பதிவு மையத்திற்கு கொண்டு செல்லப்படும். ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 20 விழுக்காடு கூடுதலாக வாக்கு பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது.” என்றார்