ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி!
Jul 20, 2025, 12:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி!

Web Desk by Web Desk
Apr 15, 2024, 01:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான  ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 29ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று மோதின. இதில், டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது.

இதில், ருதுராஜ் கெய்க்வாட் அதிகபட்சமாக 69 ரன்கள் எடுத்தார். மேலும், இந்தப் போட்டியின் மூலமாக 2000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். ஷிவம் துபே 66 ரன்களுடனும், எம்.எஸ்.தோனி 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஓவரின் 3ஆவது பந்தில் வந்த தோனி முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார்.
4ஆவது மற்றும் 5ஆவது பந்திலேயும் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க 4 பந்துகளில் 20 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக தோனி 81.48 ஸ்டிரைக் ரேட்டுடன் 27 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்தார்.

பின்னர் கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் இருவரும் அதிரடியாக விளையாடினர். பவர் பிளே ஓவரில் மும்பை இந்தியன்ஸ் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு பந்து வீச வந்த மதீஷா பதிரனா தனது முதல் ஓவரின் முதல் பந்திலேயே இஷான் கிஷான் விக்கெட்டை கைப்பற்றினார்.

அவர் 23 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் அதே ஓவரில் முஷ்தாபிஜுர் ரஹ்மானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த திலக் வர்மாவும், பதிரனா பந்தில் ஷர்துல் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து 31 ரன்களில் ஆட்டமிழ்ந்தார்.

கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 ரன்னில் வெளியேறினார். அப்போது மும்பை இந்தியன்ஸ் 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

அடுத்து வந்த டிம் டேவிட் 13, ரொமாரியோ ஷெப்பர்டு 1 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். கடைசி வரை அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 63 பந்துகளில் 11 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இது அவரது 8ஆவது டி20 போட்டி சதமாகும். இதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரோகித் சர்மா ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 2ஆவது சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் இந்தப் போட்டியில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக 4 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்திலிருந்து சரிந்து 8ஆவது இடத்திற்கு சென்றுள்ளது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலமாக 6 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: t 20ipl 2024Chennai Super Kings win IPL match!
ShareTweetSendShare
Previous Post

நெல்லையில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரம்!

Next Post

இந்தியாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட பாஜக தேர்தல் அறிக்கை! – வானதி சீனிவாசன்

Related News

வான்வழி போரை வசமாக்கும் இந்தியா : சீனா, அமெரிக்காவை மிஞ்சும் காண்டீபம் ஏவுகணை!

சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவு தினம் – பாஜக சார்பில் ரத்த தான முகாம்!

சர்ச்சை பேச்சின் பின்னணி – காங்கிரஸை கை கழுவ திமுக திட்டமா?

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சிறுமுகை அருகே இயந்திர படகு போக்குவரத்து தொடக்கம்!

15,000 அடி உயரத்தில் சோதனை – இலக்கை தூளாக்கிய அஸ்திரங்கள்! : பாகிஸ்தான், சீனாவை மிரளவிட்ட இந்தியா!

வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமைக்காவலர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் – இபிஎஸ் உறுதி!

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் குருபூஜை விழா!

அரசு கல்லூரிகளில் உள்ளகப் புகார் குழுக்களை உடனடியாக அமைக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

ஈ.வெ.ரா. பெயரில் கட்டப்பட்டு வரும் நூலக நுழைவு வாயிலில் திருஷ்டி படம்!

கும்மிடிப்பூண்டி அருகே 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை!

சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவு தினம் – உருவ படத்திற்கு நயினார் நாகேந்திரன் மரியாதை!

மயிலாடுதுறை காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் – மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!

வேலூரில் இலங்கை தமிழர் முகாமில் உள்ளவர்களுக்கும் கிராமத்தினருக்கும் இடையே மோதல்!

மயிலாடுதுறையில் மதுவிலக்கு DSP விவகாரம் – முதல்வர் தலையிட அண்ணாமலை வலியுறுத்தல்!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்களுக்கு திமுக அரசின் பதில் என்ன? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies