தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மூன்று நாட்கள் பயணமாக, இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, இன்று காலை 6.50 மணிக்கு, விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து டெல்லி சென்றார். அவருடன் ஆளுநரின் செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றனர்.
ஆளுநர் இந்த திடீர் டெல்லி பயணத்தின் நோக்கம், அவருடைய சொந்த பயணம் என்று கூறப்படுகிறது.
ஆளுநர் தனது மூன்று நாள் பயணத்தை முடித்துவிட்டு, வருகின்ற 17ஆம் தேதி புதன்கிழமை, டெல்லியில் இருந்து சென்னை திரும்பி வருகிறார்.