பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்த வாக்குறுதிகள் இடம்பெறாதது ஏன்? - வானதி சீனிவாசன் பதில்!
Aug 17, 2025, 04:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்த வாக்குறுதிகள் இடம்பெறாதது ஏன்? – வானதி சீனிவாசன் பதில்!

அதிமுகவை ஊழல் கட்சி என தற்போது விமர்சிப்பதுபோல் கடந்த தேர்தலில் விமர்சிக்காததற்கு கூட்டணி தர்மமே காரணம்! - வானதி சீனிவாசன்

Web Desk by Web Desk
Apr 15, 2024, 06:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கச்சத்தீவு மீட்பு என்பது சர்வதேச விவகாரத்துடன் தொடர்புடையது என்றும் கச்சத்தீவு விசயத்தில் தமிழக மீனவர்களின் உரிமை பாதிக்கப்படாத வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் எனப் பா.ஜ.க. கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை, தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மகளிரணி தேசிய தலைவரும், கோவை சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பாஜக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய வானதி சீனிவாசன்,

நேற்று எங்களது தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. தேர்தல் அறிக்கை அடுத்த 5 ஆண்டுகளுக்கு மட்டுமானதாக இல்லாமல், கடந்த 10 ஆண்டில் செய்த செயல்களின் மதிப்பெண் அட்டையாக உள்ளது. 2047 ம் ஆண்டு வரையான எங்களது பார்வை இடம்பெற்றுள்ளது.

ஏழை குடும்பங்களுக்கான இலவச உணவு தானியமாக அரிசி அல்லது கோதுமை வாழங்கும் திட்டம் 80 கோடி மக்களுக்கு உதவி வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதை நீட்டித்துள்ளோம். ஏற்கனவே 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை பசியில் இருந்து மீட்கவும் இத்திட்டம் உதவும்.

5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முதியோர்கள் இணைவதில் சில சிக்கல்கள் இருந்தன, தற்போது திருநங்கையர் உட்பட அனைத்து தரப்பினரும் பலன் பெறும் நிலை உருவாகியுள்ளது.

பெண்களை அதிகாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளளது. 1 கோடி ஏழைப் பெண்கள் லட்சாதிபதிகளாக்கப்பட்டுள்ளனர் , அடுத்த 5 ஆண்டில் 3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக்கப்படுவர். பாதுகாப்பு துறையில் பெண்கள் அதிகம் பங்களிப்பு செய்ய உள்ளனர்.

விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. புதிய தொழில்நுட்பங்கள் வேளாண் துறையில் அறிமுகம் செய்யப்பட்டு பருப்பு உள்ளிட்டவற்றின் உற்பத்தி அதிகரிக்கும் வகையில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியா அதிகளவில் ஊட்டச்சத்து கொண்ட வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறும். விளையாட்டு, சேவைத்துறைகளில் இளைஞர்கள் பங்களிப்பு அதிகரிக்க உள்ளது. முதியவர்களின் அறிவு, அனுபவத்தை பயன்படுத்த பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் உள்ளன.

தமிழ் மொழி தங்களுக்கே சொந்தமானது போலவும், அவர்களை தவிர யாராலும் தமிழை காப்பாற்ற முடியாது என்பது போலவும், 50 ஆண்டுகளாக திமுக அரசியல் செய்து வந்தது. ஆனால் திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படுவதன் மூலம் தமிழகம் என்றறொரு மாநிலத்திற்கு உள்ளாக மட்டுமே இருந்த திருவள்ளுவர், உலக அரங்கிற்கு எடுத்து செல்லப்பட உள்ளார். மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் தொடர்ந்து அதிகளவில் செயல்படுத்தப்படும்.

புல்லட் ரயில், குழாய் மூலம் எரிவாயு இணைப்பு போன்ற புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஜப்பானுடன் ஒப்பிட்டு கேள்வி கேட்கிறீர்கள், அனைவருக்கும் வங்கிக் கணக்கு, கழிவறை போன்ற வற்றுக்கே பல ஆண்டுகள் ஆகியுள்ளன, ஆனாலும் தற்போது இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. வந்தே பாரத் ரயில்கள் நம் நாட்டில் தயாரிக்கப்பட்டு, உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மறைமுக வரி மூலம் அரசுக்கான வரி வருவாய் உயர்த்தப்படும். பொருளாதாரத்தில் பின் தங்கி நலிவடைந்த நிலையில் இருந்த இலங்கைக்கு இந்தியா பல வகையில் உதவியுள்ளது. கச்சத்தீவு திமுகவுக்கு தெரியாமல் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது பொய் என்பதை நிரூபிக்கவே நாங்கள் சில நாட்களுக்கு முன் கச்சத்தீவு குறித்து பேசினோம். உண்மையில் என்ன நடந்தது என்பதை கூறினோம். அதே நேரம் கச்சத்தீவு மீட்பு என்பது சர்வதேச விவகாரம் தொடர்புடையது.

வரும் நாளில் கச்சத்தீவை மீட்பது குறித்து சாத்தியமான நடவடிக்கை எதுவோ, அதை மேற்கொள்வோம். கச்சத்தீவு விசயத்தில் தமிழக மீனவர்களின் உரிமை பாதிக்காமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். கச்சத்தீவு மட்டுமல்ல சீனா , பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளுடனான நதிநீர் பிரச்சனைகள் உட்பட இந்தியாவின் இறையான்மை, பாதுகாப்பு பாதிக்கப்படாத வகையில் அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்துவோம்.

கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியதால் இந்தியாவின் எல்லை சுருங்கியது. கச்சத்திவு விசயத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள்.

அதிமுகவை ஊழல் கட்சி என்று திடீரென விமர்சிக்க காரணம் என்ன என்று கேட்கிறீர்கள், கடந்த தேர்தலில் கூட்டணி வைத்தபோது ஏன் இதை கூறவில்லை என்று கேட்கிறீர்கள்.

வைகோ கூட திமுக குறித்து பல குற்றச்சாட்டுகளை சொல்லியிருந்தார், அவரிடம் ஏன் திமுகவுடன் கூட்டணி என கேட்பீர்களா..? நாங்கள் கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்ததால் கூட்டணி தர்மத்தை கடைபிடித்தோம்.

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் ஏன் திடீரென கருத்து கூறுகிறோம், அதிமுக ஓபிஎஸ், டிடிவியிடம் செல்லும் என்று அண்ணாமலை பேசியது பற்றி கேட்கிறீர்கள் ஜூன் 4 ம் தேதி இதற்கெல்லாம் பதில் கிடைக்கும் எனத் தெரிவித்தார்.

 

இதனையடுத்து, பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தலைமையிலான குழு தயார் செய்த தமிழக அரசின் மீதான மக்களின் புகார்களை தொகுத்து “திராவிட மாடலின் சாதனைகள்” என்கிற புத்தகத்தை பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வெளியிட்டார். மேலும், இந்தப் புத்தகங்கள் 10 லட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டு பொதுமக்களிடம் விநியோகம் செய்யப்பட உள்ளதாக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார்.

Tags: Why is there no promise about Kachchathivu in the BJP election manifesto? - Vanathi Srinivasan Answer!
ShareTweetSendShare
Previous Post

போதை வணிகத்தை எதிர்த்து நான் போராடுவேன்! – நெல்லையில் பிரதமர் மோடி ஆவேசம்!

Next Post

தமிழகத்தில் பாஜக ஆட்சியில் கள்ளுக்கடைகள் திறக்கப்படும்! – அண்ணாமலை பேச்சு

Related News

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

நெல்லையில் பாஜக மண்டல மாநாடு – சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

Load More

அண்மைச் செய்திகள்

கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை ராமதாசுக்கு வழங்கி பாமக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்!

நாமக்கல் அருகே பெண்ணை மிரட்டி கல்லீரல் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

மேலூர் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை – போலீஸ் விசாரணை!

பெரியார் விருதுகளை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

The Bengal Files படத்தின் ட்ரெய்லரை திரையிட விடாமல் தடுத்த விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

திருச்செந்தூர் கோயிலில் ரூ.100 கட்டண தரிசனத்தை ரத்து செய்து பொது தரிசன வழியில் அனுமதி – பக்தர்கள் வரவேற்பு!

இந்தியா மீதான வரி விதிப்பு முட்டாள்தனமான நடவடிக்கை – அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் விமர்சனம்!

தனக்கு தானே விருது அறிவித்துக்கொண்ட அசிம் முனீர் – சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

புதினை வரவேற்க அமெரிக்க போர் விமானங்கள் – ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையா?

அலாஸ்காவில் நடக்க முடியாமல் தடுமாறிய ட்ரம்ப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies