13000-க்கும் அதிகமான டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில் எந்த அணியும் செய்யாத சேஸிங் சாதனையை ( 262 ) செய்துள்ளது பெங்களூரு அணி.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இதன் தொடரின் 30-வது போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சன் ரைசஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சண் ரைசஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 287 ரன்களை எடுத்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை படைத்தது.
இதில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 9 பௌண்டரீஸ் மற்றும் 8 சிக்சர்கள் என 41 பந்தில் 102 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 34 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க தொடர்ந்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென்2 பௌண்டரீஸ் மற்றும் 7 சிக்சர்கள் என மொத்தமாக 31 பந்தில் 67 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய ஐடன் மார்க்ரம் 32 ரன்களும், அப்துல் சமத் 37 ரன்களும் எடுக்க சன் ரைசஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 287 ரன்களை எடுத்தது. முன்னதாக மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சன் ரைசஸ் ஐதராபாத் அணி 277 ரன்கள் எடுத்ததே ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களாக இருந்தது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் 287 ரன்கள் அடித்தது மூலமாக தனது சொந்த சாதனையை முறியடித்தது சன் ரைசஸ் ஐதராபாத் அணி. இதை தொடந்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கியது.
இதில் தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி 6 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 20 பந்துகளில் 42 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய பாஃப் டு பிளெசீ 7 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் என மொத்தமாக 62 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஒரு கட்டத்தில் 122 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அப்போது களமிறங்கிய தினேஷ் கார்த்தி 5 பௌண்டரீஸ் மற்றும் 7 சிக்சர்கள் என மொத்தமாக 35 பந்துகளில் 83 ரன்களை எடுத்து வெற்றியை நோக்கி சென்றார்.
ஆனால் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 262 ரன்களை எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இருப்பினும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த போதும் டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே மாபெரும் சாதனை படைத்தது.
இதுவரை 13000-க்கும் அதிகமான டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில் எந்த அணியும் செய்யாத சேஸிங் சாதனையை ( 262 ) செய்துள்ளது பெங்களூரு அணி.