தென்மேற்குப் பருவமழை நாடு முழுவதும் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்பு!
Mar 19, 2026, 02:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென்மேற்குப் பருவமழை நாடு முழுவதும் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்பு!

Murugesan M by Murugesan M
Apr 16, 2024, 11:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்மேற்குப் பருவமழை காலத்தில் நாடு முழுவதும் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக புவி அறிவியல் அமைச்சக செயலாளர் தெரிவித்துள்ளார்.

2024 ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்குப் பருவமழையின் போது நாடு முழுவதும் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று புவி அறிவியல் அமைச்சக செயலாளர் டாக்டர் எம்.ரவிச்சந்திரன்  தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர்,

2024 தென்மேற்குப் பருவமழை குறித்து விளக்கமளித்தார். நீண்ட கால சராசரியில்  106% ஆக இருக்கும் என்றும், இது 5% கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். 1971-2020 தரவுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் பருவகால மழையின் நீண்டகால சராசரி 87 செ.மீ.

இந்த முன்னறிவிப்பு இயக்கவியல் மற்றும் புள்ளிவிவர மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டது என்றும், வடமேற்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் என்றும் டாக்டர் ரவிச்சந்திரன் கூறினார். வடக்கு அரைக்கோளத்தில் இயல்பை விட குறைவான பனி உறைவு, 2024 தென்மேற்குப் பருவமழை காலத்தில் மழைக்கு சாதகமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த மூன்று மாதங்களில் (ஜனவரி முதல் மார்ச் 2024 வரை) வடக்கு அரைக்கோளத்தில் பனிப்பொழிவு இயல்பை விட குறைவாக இருந்தது, இது இந்தப் பருவமழை காலத்தில் அதிக மழைப்பொழிவைக் குறிக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் டாக்டர் மொஹபத்ரா தெரிவித்தார்.

வடக்கு அரைக்கோளம் மற்றும் யூரேசியா முழுவதும் குளிர்கால மற்றும் வசந்த கால பனி பரப்பளவு பொதுவாக அடுத்தடுத்த பருவ மழையுடன் தலைகீழ் தொடர்பைக் கொண்டுள்ளது. 2024 மே கடைசி வாரத்தில் பருவ மழைக்கான  கணிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் என்று அவர் கூறினார்.

மேற்கண்ட கணிப்புகளின் தொடர்ச்சியாக, முறையே ஜூன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் அடுத்தடுத்து வரும் ஒரு மாதத்திற்கான மாதாந்திர மழை முன்னறிவிப்பு வெளியிடப்படுகிறது. கூடுதலாக, நாடு முழுவதற்குமான மழை அளவு முன்னறிவிப்புகளும், பருவத்தின் இரண்டாம் பாதியில் (ஆகஸ்ட்-செப்டம்பர்) மழைப்பொழிவின் அளவும் ஆகஸ்ட் மாத முன்னறிவிப்புடன் ஜூலை மாத இறுதியில் வெளியிடப்படுகின்றன.

2024, மே  கடைசி வாரத்தில் பருவ மழைக்கான புதுப்பிக்கப்பட்ட கணிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் எனத் தெரிவித்தார்.

Tags: Southwest Monsoon likely to bring more than normal rainfall across the country!
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

சர்வதேச ஹாக்கி தரவரிசை பட்டியல் : இந்தியாவுக்கு எந்த இடம்?

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies