சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தரவரிசை பட்டியலில் இந்திய ஆண்கள் அணி 4-வது இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது
இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரில் விளையாடியது.
இந்த தொடரின் ஆஸ்திரேலியா ஹாக்கி அணி தொடர்ந்து 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று 5-0 என இந்தியாவை வீழ்த்தியது.
இந்நிலையில் சர்வதேச ஹாக்கி சம்மேளனம் ஹாக்கி அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் இந்திய ஆண்கள் அணி 4-வது இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகளில் இந்திய அணி ‘ஒயிட்வாஷ்’ ஆனது. இதனால் இத்தகைய சரிவை சந்தித்துள்ளது.
இந்திய அணி தரவரிசையில் முன்னேற, அடுத்து ஐரோப்பாவில் நடக்கவுள்ள புரோ லீக் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
முதல் மூன்று இடங்களில் நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரேலியா அணிகள் உள்ளன. அதேபோல் பெண்கள் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா 9-வது இடத்தில் நீடிக்கிறது.