ராமநாதபுரம் பரமக்குடியில், பாஜக கூட்டணி சுயேச்சை வேட்பாளர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வாகன பேரணியில் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.
ராமநாதபுரம் லோக்சபா தொகுதி பாஜக கூட்டணி சுயேச்சை வேட்பாளர் பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று பரமக்குடியில் உள்ள கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் வாகன பேரணியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்றார்.
பலாப்பழ சின்னத்தில் மக்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என நட்டா கேட்டு கொண்டார். சாலையின் இருபுறமும் நின்ற தொண்டர்கள் மற்றும் மக்கள் நட்டாவை மலர் தூவி வரவேற்றனர்.
வாகன பேரணியில் நட்டா பேசுகையில்,
‛‛மக்களுக்காக குரல் கொடுப்பவர் ஓ.பன்னீர் செல்வம். அவருக்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் எனக் கேட்டு கொண்டார். வரும் மக்களவைத் தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல. 2047ம் ஆண்டு இந்தியாவை வல்லரசாக மாற்றும் தேர்தல்” எனக் நட்டா குறிப்பிட்டார்.