வங்கதேசத்திற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய வீராங்கனைகள் அறிவிப்பு.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு சுற்று பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் வங்கதேசத்தில் உள்ள சில்ஹெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டி ஏப்ரல் 28 ஆம் தேதியும், இரண்டாவது போட்டி ஏப்ரல் 30 ஆம் தேதியும் மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
அதேபோல் மூன்றாவது போட்டி மே 2 ஆம் தேதியும், நான்காவது போட்டி மே 6 ஆம் தேதியும் மதியம் 1.30 மணிக்கும் நடைபெறவுள்ளது. இந்த தொடரின் கடைசி போட்டி மே 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ இந்த தொடரில் பங்குபெறவுள்ள வீராங்கனைகளை அறிவித்துள்ளது.
அதன்படி இந்த தொடரில் ஹர்மன்ப்ரீத் கவுர் ( கேப்டன் ), ஸ்மிருதி மந்தனா ( துணை கேப்டன் ), ஷபாலி வர்மா, ஹேமலதா, சஜனா சஜீவன், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, ராதா யாதவ், தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், அமன்ஜோத் கவுர், ஸ்ரேயங்கா படேல், சைகா இஷாக், ஆஷா சோபனா, ரேணுகா சிங் தாக்கூர், டைட்டாஸ் சாது ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.