ஊழலை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து தற்போது திமுக ஆட்சி நடந்து கொண்டிருப்பதாக ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தர் குற்றம் சாட்டி உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் பாரிவேந்தர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர்,
தமிழ்நாட்டில் நீட்டை வைத்து கடந்த 3 ஆண்டுகளாக ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார்கள் என தெரிவித்தார். மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் பெறுவதற்கு தாமரை சின்னத்தில் மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஊழலை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து தற்போது திமுக ஆட்சி நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.