இந்தியாவில் உள்ள மொழிகளில் மூத்த மொழி தமிழ் : ராஜ்நாத் சிங்
Sep 6, 2025, 03:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் உள்ள மொழிகளில் மூத்த மொழி தமிழ் : ராஜ்நாத் சிங்

Web Desk by Web Desk
Apr 16, 2024, 05:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 தமிழ்நாடு என்னை மிகவும் கவர்ந்த மாநிலம், இந்தியாவில் உள்ள மொழிகளில் மூத்த மொழி தமிழ் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி தொகுதி பாஜக வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று உரையாற்றினார்.

கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங்,

ஆலயங்களின் மாநிலமான தமிழகம் வரும் போது மனம் அமைதி கொள்கிறது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்ததன் மூலம் தமிழ் கலாசாரம் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமான செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவி பெருமைப்படுத்தியவர் பிரதமர் மோடி.

தமிழகம் என்று பேசப்படும் போது நம் நினைவுக்கு வருவது செங்கோல் தான். இன்டர்நெட்டில் ஏற்பட்ட புரட்சியால் யூபிஐ சேவை தற்போது அதிகரித்துள்ளது. 2014ம் ஆண்டுக்கு பிறகு மருத்துவ வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. நாடு முழுவதும் புதிதாக 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன.

பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் முதல் 25 நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனக் கூறி தமிழின் பெருமையை மோடி உயர்த்தியுள்ளார். நாடு முழுவதும் தமிழ் மொழியை கொண்டு செல்ல பிரதமர் மோடி பாடுபடுகிறார்.  தமிழ்நாடு என்னை மிகவும் கவர்ந்த மாநிலம்; இந்தியாவில் உள்ள மொழிகளுக்கு மூத்த மொழி தமிழ் என குறிப்பிட்டார்.

உலகில் 5ஜி சேவை பயன்பாட்டில் இருக்கும்போது இந்தியாவில் மோடி 6ஜி சேவை வழங்க முயற்சி செய்து வருகிறார். நாட்டில் ராணுவ கப்பல் கட்டும் அளவிற்கு இந்தியா உயர்ந்து உள்ளது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் ஊழல் தடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags: The oldest language in India is Tamil : Rajnath Singh
ShareTweetSendShare
Previous Post

ஜாபர் சாதிக்கின் காவல் நீட்டிப்பு! – டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

Next Post

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற ஹர்திக் பாண்டியாவுக்கு நிபந்தனை!

Related News

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தில் GDP உயரும் : மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

கோவை : காட்டு யானைகளை விரட்ட கும்கி யானைகள் வரவழைப்பு!

திருப்பூர் : பெப்சி, கொக்கோகோலா பானங்களை கீழே ஊற்றி அமெரிக்காவுக்கு எதிர்ப்பு!

மகாராஷ்டிரா : திருவிழா போல் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம்!

அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி தொடரும் : செங்கோட்டையன்

திண்டுக்கல் : இளம் பெண் மரணத்தில் சந்தேகம் – உறவினர்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

நேஷன்ஸ் கோப்பை கால்பந்து : இந்தியா – ஆப்கானிஸ்தான் போட்டி டிரா!

தாய்லாந்து புதிய பிரதமராக அனுடின் சார்ன்விரகுல் தேர்வு!

ஜம்மு காஷ்மீர் : அசோக சின்னத்தை உடைத்து அகற்றிய சம்பவத்துக்குக் கடும் கண்டனங்கள் குவிந்துள்ளன!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது : அண்ணாமலை விமர்சனம்!

எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருவண்ணாமலை கோயில் முழுவதும் குப்பைகள், துர்நாற்றம் வீசி வருவதாக பக்தர்கள் குற்றச்சாட்டு!

தேனி : எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

பெண் பலி விவகாரம் – மாநகராட்சிக்கு போலீசார் கடிதம்!

திருவண்ணாமலை : பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!

பாகிஸ்தானிடம் இருந்து விலகும் சீனா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies