சிஎஸ்கே வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் ஐபிஎல்-லில் விளையாட மே 1 ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இதில் சென்னை சூப்பர் அணியில் வேகபந்துவீச்சாளராக விளையாடி வரும் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானுக்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாட வங்கதேச கிரிக்கெட் ஆணையம் அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில் தற்போது சிஎஸ்கே மற்றும் பிசிசிஐ-யின் கோரிக்கையை ஏற்று 1 நாள் நீட்டித்து மே 1 ஆம் தேதி வரை விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மே மாத ஆரம்பத்தில் ஜிம்பாப்வே-வங்கதேச அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடைபெறவுள்ளது இவர் அந்த தொடரில் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.