டி20 உலகக் கோப்பையில் இடம்பெற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நிபந்தனை விதித்துள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இதில் மும்மை இந்தியன்ஸ் அணி தாங்கள் விளையாடிய 6 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆல் ரௌண்டராக செயல்படுகிறார். ஆனால் அவர் இந்த தொடரில் சரியாக பந்துவீசவில்லை. அதிகபட்சமாக 2 ஓவர்கள் மட்டுமே பந்துவீசுகிறார்.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் இடம்பெற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நிபந்தனை விதித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் இடம்பெற, நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா அதிகளவில் பந்துவீச வேண்டும் என ரோகித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பந்துவீச்சில் அவர் மீண்டும் பழைய FORM-க்கு திரும்ப வேண்டும் என்பதற்காக இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.