2000 ஆண்டுகள் பழைமையான திருக்கோயில்கள் நிறைய நிறைய தமிழகத்தில் உள்ளன அவற்றில் ஒன்றுதான் திருக்குறுக்கை வீரட்டானம் திருக்கோயில்.
தேவாரப் பாடல் பெற்றத் தலங்களில் சோழ நாட்டில் காவிரி வடகரையில் உள்ள 26 வது திருத்தலமாக விளங்கும் இத் திருத்தலம் அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. மன்மதனை எரித்த வரலாறு நடந்த இடம் என்பதால் இத்தலம் பெரும்பாலான மக்களால் காமதகன சிவாலயம் என்றே அழைக்கப் படுகிறது.
தீர்க்கவாகு என்னும் முனிவா், இறைவன் எழுந்தருளியிருக்கும் தலங்களுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். செல்லும் கோவில்களில் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய கங்கை நீரை ஆகாயத்தின் வழியே பெற்று அபிஷேகம் செய்து வந்தார் .
அதாவது , ஒவ்வொரு ஆலயத்தின் முன்னே நின்று நீண்ட தன் கைகளில் கமண்டலத்தை ஏந்தி, வானத்தை நோக்கி நீட்டுவார். கங்கை நீர் கமண்டலத்தில் வரும். அந்தப் புனித நீரைக் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்து வணங்குவார் .
அப்படியே இந்தக் கோவிலுக்கு வந்த தீர்த்தவாகு முனிவர், இங்கே உள்ள சூல தீர்த்தம் சிறந்தது என்றியாமல் வழக்கம்போல கணகைநீர் பெற கைகளை வானை நோக்கி தூக்கினார் . கங்கை நீர் வருவதற்குப் பதிலாக அவரது கைகள் குறுகின.
ஆலயத்தின் முன்புறமுள்ள திரிசூல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டார். சூலதீர்த்தம் கங்கையை விட புனிதமானது என்பதை அறியாது வழக்கம்போல, கங்கைநீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய முடிவுசெய்து தன் இரு கரங்களையும் ஆகாயத்தை நோக்கி தூக்கினார்.கங்கை நீர் வருவதற்குப் பதிலாக அவரது நீண்ட கைகள் குறுகிப்போயின. உண்மை உணர்ந்த முனிவர் இறைவனை சரணடைந்தார். முதலில் விநாயகரைவணங்கினார் . விநாயகர் அருள் புரிந்தார் . எனவே இங்குள்ள விநாயகர் குறுங்கை விநாயகர் எனப்படுகிறார் . இந்தக் கோவிலும் ‘குறுங்கைத்தலம்’ எனப் பெயர் பெற்றது .
அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை வீரட்டானேஸ்வராக சிவபெருமான்யோகேஸ்வரர் என்ற திருபெயருடன் உற்சவராக அருள்பாலிக்கிறார்.
தனிச் சன்னிதியில் ஆவுடையார் மீது தாமரை இருப்பதும், அவருக்கு அருகில் குறுங்கை முனிவரின் உருவம் இருப்பதும் சிறப்பாகும்.
காமனை எரித்த தலம் என்பதால் காம தகன மூர்த்தியாக விளங்கும் சுவாமி , இடது காலை மடித்து,வலது காலை தொங்கவிட்டு , வலது கரத்தில் அபய முத்திரையும் , இடது கரத்தை மடக்கிய கால் மீது வைத்து அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கிறார் .
ஆண்டுதோறும் , மாசி மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோஸ்தவம் திருவிழாவின் போது , காம தகன விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம் .
மன்மதனை எரித்த தலம் கூடவே மன்மதனை உயிர்ப்பித்த தலம் என்பதால் காதல் நிறைவேறுவதற்கான தலமாக இந்தக் கோயில் திகழ்கிறது. சுயம்பு மூர்த்தியாக ,யோக மூர்த்தியாக விளங்கும் மூலவரை வணங்கினால் உடல்பலம்,மனோபலம் யோகபலம் கிடைக்கும். வேலையில் உயர்வு கிடைக்கும். தொழில் அபிவிருத்தி அடையும். திருமணத் தடை நீங்கி, திருமணம் கைகூடும். சந்தான பாக்கியமும் வாய்க்கும்.
நீற்றினை நிறையப் பூசி
நித்தலும் நியமஞ் செய்து
ஆற்றுநீர் பூரித் தாட்டும்
அந்தண னாரைக் கொல்வான்
சாற்றுநாள் அற்ற தென்று
தருமரா சற்காய் வந்த
கூற்றினைக் குமைப்பர் போலுங்
குறுக்கைவீ ரட்ட னாரே.
என்ற அப்பர் தேவாரப் பாடலைப் பாடி திருக்குறுக்கை இறைவனைத் துதித்து நலம் பெறுவோம்.