மத்திய அரசின் இலவச உணவு தானிய திட்டத்தில் ஊழல் செய்யும் அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் என மத்திய இணையமைச்சரும் நீலகிரி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் எச்சரித்துள்ளார்.
மேட்டுப்பாளையம் அன்னூர் பகுதியில் உள்ள காய்கறி சந்தையில் மத்திய இணையமைச்சரும் நீலகிரி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பின்னர் கல்லூறு கிராமத்திற்கு சென்ற அவர், அங்கு வசிக்கும் பழங்குடியின் மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது மத்திய அரசு வழங்கும் ஐந்து கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு முறையாக வழங்கபடுகின்றதா என எல்.முருகன் கேள்வி எழுப்பினார். அதற்கு மக்கள் இல்லை என பதில் கூற, முறைகேடு செய்யும் அதிகாரிகள் சிறை செல்வார்கள் என்று தெரிவித்தார்.