ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர் தீரன் சின்னமலை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர்களில் பல வீரதீரச் செயல்களால் அறியப்பட்டவர் தீரன் சின்னமலை. ஈரோடு மாவட்டம் காங்கயம் அருகே உள்ள மேலப்பாளையம் என்னும் ஊரில் ரத்னசாமி கவுண்டர் மற்றும் பெரியாத்தா தம்பதிக்கு மகனாக கடந்த 1756-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ந் தேதி பிறந்தார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் தீர்த்தகிரி கவுண்டர்.
இந்நிலையில் ஓடா நிலைக் கோட்டை கட்டி கொங்கு மண்ணை ஆண்டவர் தீரன் சின்னமலை என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
சுதந்திரப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய, முதல் சுதந்திரப் போராட்ட வீரர், தீரன் சின்னமலை அவர்கள் பிறந்த தினம் இன்று. வீரத்தின் அடையாளமாக விளங்கிய தீரன் சின்னமலை அவர்கள், ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர். மூன்று போர்களில் ஆங்கிலேயப் படைகளைத் தோற்கடித்தவர்.
சுதந்திரப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய, முதல் சுதந்திரப் போராட்ட வீரர், தீரன் சின்னமலை அவர்கள் பிறந்த தினம் இன்று.
வீரத்தின் அடையாளமாக விளங்கிய தீரன் சின்னமலை அவர்கள், ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர். மூன்று போர்களில் ஆங்கிலேயப் படைகளைத் தோற்கடித்தவர். ஓடா… pic.twitter.com/qdtlnoF9wz
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) April 17, 2024
ஓடா நிலைக் கோட்டை கட்டி கொங்கு மண்ணை ஆண்டவர். மாவீரன் தீரன் சின்னமலையின் அளவில்லா கொடைகளும், எண்ணற்ற ஆலயத் திருப்பணிகளும், என்றும் அவரது புகழைக் கூறும். தீரன் சின்னமலை வரலாற்றைப் போற்றி வணங்குகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.